Spread the love

விழுப்புரம் செப், 9

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் கருவிகள் மற்றும் இயற்கை விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சுகந்தி முன்னிலை வகித்தார். வட்ட வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அரசு மானியத்துடன் நாகலாம்பட்டு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ.6 லட்சம் மதிப்புள்ள நெல் நடவு எந்திரம், கலை எடுக்கும் கருவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், ஒன்றியக்குழு துணை தலைவர் ஜெயபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, வெங்கடசுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமாறன், பழனி, கண்ணன், குமார், சோ குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *