நெல்லை ஜூலை, 31
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில், தற்போது அடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 30-ம் தேதி வரை தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்த நிலையில், நேற்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் தங்கள் உடைமைகளை கொண்டு வருவதற்காக தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கினர்.
மேலும் இன்று வனப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கான வனத்துறையினர், பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதித்தனர்.
அதன்படி சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு இன்று வாகனத்தில் வந்த பக்தர்களை கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான வாகனங்கள் பாபநாசம் வனச்சோதனை சாவடி முன் குவிந்தன. தொடர்ந்து இதனை கண்டித்து பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர். பொதுமக்களுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கானோர் பாபநாசம் வனச்சோதனை சாவடியை முற்றுகையிட்டு, பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு வாகனங்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதியளித்தார். தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வாகனங்களில் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
செய்தி:
திரு. ஜான் பீட்டர்.
நெல்லை மாவட்ட செய்தியாளர்.
#Vanakambharatham #nellai #news