நெல்லை ஜூலை, 31
நெல்லை மாவட்டம் களக்காடு ஒன்றியத்திற்கு ட்பட்ட கோதைச்சேரியில் வேட்டைக்காரன் குளம் உள்ளது. களக்காடு யூனியன் நிர்வாகத்திற்கு உள்பட்ட இந்த குளம் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்பட்டது.
இதனை வடுகட்சி மதிலை சேர்ந்த முத்துப்பாண்டியன் (55) என்பவர் குத்தகைக்கு எடுத்து மீன்கள் வளர்த்து வந்தார். இந்நிலையில் குளத்தில் ஆங்காங்கே குவியல் குவியலாக மீன்கள் இறந்து மிதக்கின்றன. மீன்கள் இறப்பிற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. குளத்தில் விஷம் அல்லது வேறு ஏதேனும் ரசாயன பொருட்கள் கலக்கப் பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் ரூ.2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குளத்தில் அருகில் உள்ள கிராம மக்கள் ஆடு மாடுகளை தண்ணீர் அருந்த கொண்டு செல்வது வழக்கம். மீன்கள் இறந்து மிதப்பதால் குளத்திற்கு தண்ணீர் குடிக்க ஆடு மாடுகளை கொண்டு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி:
திரு. ஜான் பீட்டர்.
நெல்லை மாவட்ட செய்தியாளர்.
#Vanakambharatham #nellai #news