கடலூர் செப், 6
நெய்வேலி ஆர்ச்கேட் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறியாளர் ரவிச்சந்திரன் அலுவலகத்தை பாமக. தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், செல்வ.மகேஷ், கார்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து.வைத்திலிங்கம், முன்னாள் மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், மாவட்ட பசுமை தாயகம் செயலாளர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், மணிவாசகம், கணேஷ், நகர செயலாளர்கள் சார்லஸ், ஆனந்தன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.