கடலூர் செப், 5
வடலூரில் வேளாண் மற்றும் சகோதர துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழக வேளாண்மைத்துறை இயக்குநர் அண்ணாதுரை, கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பயிர் வாரியான சாகுபடி பரப்பு, உணவு தானிய உற்பத்தி, சம்பா சாகுபடிக்கு தேவையான விதை வினியோகம், விதை மற்றும் உர இருப்பு ஆகியவற்றை வட்டாரம் வாரியாக அமைச்சர் ஆய்வு செய்தார்.
இதில் கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் ரவிச்சந்திரன், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பாண்டியன், மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார், வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார், நகரசெயலாளர் தமிழ்ச்செல்வன், துணை தலைவர் சுப்புராயலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.