நெல்லை செப், 6
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ.உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ஓபிஎஸ் அண்ணா திமுக அணியினர் புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து தலைமையில் திருநெல்வேலி டவுண் மணிமண்டபத்தில் உள்ள வஉசி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி செயலாளர் முருகேசன், பாளை சுந்தர்ராஜன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் கணபதி சுந்தரம், ஒன்றிய நகர நிர்வாகிகள், கிளை கழக செயலாளர் உள்பட கழகத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.