தர்மபுரி செப், 5
நல்லம்பள்ளி வட்டம் ஏ. ஜெட்டி அள்ளி ஊராட்சி வெற்றிலைக்காரன் பாளையத்தில் தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு டெல்டா மாவட்டங்களில் இருந்து வரப்பெற்றுள்ள நெல் மூட்டைகளை தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் அரவைக்கு அனுமதி பெற்றுள்ள அரிசி ஆலைகளுக்கு வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தர்மபுரி மண்டல மேலாளர் சரவணன், நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் பெருமாள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.