நெல்லை செப், 5
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்ததினத்தை முன்னிட்டு நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது,
முதலமைச்சர் அறிவித்தபடி ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் வ.உ.சி. மணி மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சிகள் மூலம் அவரது வரலாற்றை அனைவரும் காணும் வகையிலான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
வ. உ.சி.யின் 150-வது பிறந்தநாள் விழா மற்றும் பாரதியார் 100-வது நினைவுதினம்ஸஆகியவையையொட்டி அவர்கள் 2 பேரும் படித்த பள்ளியில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.