காஞ்சிபுரம் செப், 5
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர், வளத்தூர், தண்டலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக. கவுரவ தலைவர் ஜி.கே. மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்கள் நேற்று பரந்தூர், ஏகனாபுரம், மங்கலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தும் விவசாய நிலங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது முன்னாள் மத்திய இணை அமைச்சர் மூர்த்தி, பொருளாளர் திலகவதி, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பாமக. செயலாளர் மகேஷ் குமார் மாவட்ட தலைவர் உமாபதி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சக்தி கமலம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.