புதுடெல்லி ஜூலை, 24
மத்திய ஆயுதப்படைகளில் உள்ள காலியிடங்கள் தொடர்பாக ராஜ்யசபாவில் அமைச்சர் நித்யானந்த ராய் விளக்கம் அளித்தார். அதில், துணை ராணுவப் படைகளில் வீரர்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டு முதல் 10,04,980-லிருந்து 10,67,110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி 1,09,868 காலியிடங்கள் உள்ளதாகவும், தற்போது 72,689 இடங்களுக்கு ஆள்சேர்ப்பு பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.