ஆந்திரா ஜூலை, 23
ஆந்திராவில் கணவனை கொன்று உடலை வீட்டு வாசலில் மனைவியே வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. கணவன் ராமனய்யா உடனான சண்டையால் மனைவி ராமனம்மா தனது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். அங்கும் சென்று ராமனய்யா தொந்தரவு செய்ததால், தனது சகோதரர் உதவியுடன் கணவன் கண்ணில் மிளகாய் பொடியை வீசி மனைவி கொலை செய்துள்ளார். மேலும், உடலை அவரது வீட்டு வாசலில் போட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறை விசாரித்து வருகிறது.