சென்னை ஏப், 1
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு 35 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் கடந்த மாதம் தொடங்கியது. ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதற்காக பாஜகவினர் வீடு வீடாக சென்று மக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.