சென்னை ஏப், 1
சிதம்பரம் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசன் (87) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 1977ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1980 வரை பதவியிலிருந்தார். திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்த பிறகு அவருடன் அதிமுகவுக்கு சென்ற இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் தாய்க் கழகமான திமுகவில் இணைந்தார். கடந்த 2024 தேர்தலில் திருமாவளவன் வெற்றிக்காகப் பெரிதும் பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.