புதுடெல்லி மார்ச், 22
மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவானால் மட்டுமே, நதிநீர் இணைப்பு சாத்தியமாகும் என மத்திய அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், நதிநீர் இணைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த, மத்திய அரசு முயன்று வருவதாக கூறினார். இணைப்புக்காக 30 நதிகள் அடையாளம் காணப்பட்டு, 11 நதிகளுக்கான திட்ட அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்