சத்தீஸ்கர் மார்ச், 21
சத்தீஸ்கரில் பிஜப்பூர், கான்கெர் மாவட்டங்களில் நடந்த இரு வேறு என்கவுன்ட்டர்களில் 30க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இதனுடன் சேர்த்து கடந்த 80 நாளில் மட்டும் 113 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பிஜப்பூரில் மட்டும் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நக்சல் இல்லாத நாட்டை உருவாக்கும் முயற்சியில் நமது படை வீரர்கள் மகத்தான வெற்றியை பெற்று வருகின்றனர் என அமித் ஷா பாராட்டியுள்ளார்.