கேரளா மார்ச், 19
இருமுடி கட்டு இல்லாமல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிதாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் காலை 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இதன் மூலம் இருமுடி கட்டுடன் வரும் பக்தர்கள் கூடுதல் நேரம் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக இருக்கும் எனவும் தேவசம்போர்டு விளக்கம் அளித்துள்ளது.