புதுடெல்லி மார்ச், 23
CUET – UG நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களிலும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (மார்ச் 22) நிறைவடைந்தது. இந்நிலையில், நாளை (மார்ச் 24) இரவு 11.50 வரை cuet.nta.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.