சென்னை மார்ச், 25
வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து சென்னையில் ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், ஆபீஸ் செல்பவர்கள் வசதிக்காக சென்னையில் மின்சார ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கடற்கரை – செங்கல்பட்டு இடையே 2 சேவைகளும், தாம்பரம் கடற்கரை இடையே ஒரு சேவையும் இயக்கப்படவுள்ளது.