சென்னை மார்ச், 18
லண்டன் ஸ்கூல் மாணவர் அண்ணாமலை அரசியலை சரியாக படிக்காமல் பாதியில் வந்து விட்டு பிஜேபி, திமுக கள்ளக் கூட்டணி வெளிவரத்துவங்கியதும் விழி பிதுங்கி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதாக தவெகா பதிலடி கொடுத்துள்ளது. மாநில தலைவராக இல்லாவிட்டால் உங்களை மக்கள் கடுகளவு மதிக்க மாட்டார்கள். கண்டுகொள்ளவும் மாட்டார்கள் எத்தனை காலம் இதுபோல் பேசியும் சாட்டையால் அடித்தும் ஏமாற்றுவீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.