புதுடெல்லி பிப், 23
கொரோனா பெருந்தொற்றின் போது இந்தியா சரியான சமயத்தில் கை கொடுத்தால் தான் நிறைய உயிர்களை காப்பாற்ற முடிந்ததாக கயானாவின் சுகாதார அமைச்சர் பிராங்க் அந்தோணி நன்றி தெரிவித்துள்ளார். தடுப்பூசியை வழங்க பிற நாடுகள் யோசித்துக் கொண்டிருந்தபோது சற்றும் தயங்காமல் எங்களுக்கு அதை இந்தியா தான் வழங்கியது என தெரிவித்துள்ளார். நவீன ஹெல்த்கேரையும் கொடுத்து கை கொடுத்த நாடு இந்தியா தான் என புகழ்ந்துள்ளார்.