தேனி செப், 1
ஆண்டிபட்டி ஒன்றியம் பழையகோட்டை ஊராட்சியில் நாகலாறு ஓடையின் குறுக்கே பாலம் இல்லாததால் மழைக்காலத்தில் பொதுமக்கள் தவிக்கின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலை ஊசி மலையில் இருந்து மழைக்காலத்தில் வரும் நீர் பாலக்கோம்பை, ராயவேலூர் பகுதிகளை கடந்து பழையகோட்டை வழியாக செல்கிறது. பழையகோட்டையில் ஓடையின் குறுக்கே பாலம் இல்லை. ஓடையில் கூடுதலான நீர் வரும்போது பொதுமக்கள் 3 மணி நேரம் வரை காத்திருந்து நீர் வடிந்த பின் கடந்து செல்கின்றனர். பல ஆண்டுகளாக மழைக்காலத்தில் இந்த அவலம் தொடர்கிறது. இப்பகுதியில் பாலம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.