சென்னை பிப், 16
நாடு முழுவதும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இதற்காக எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறி தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழகத்தில் மட்டும் 6,695 பேர் தேர்வு செய்யப்படுவர் இந்த தேர்வு பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கு நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.