வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். கோடை விடுமுறைக்காக மாணவர்கள் பலரும் வெளியூர் சென்றுள்ளதால் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பை முன்கூட்டியே தெரிவிக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையொட்டி, பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் இருந்தால் முன்கூட்டியே அரசு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.