வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் (GAS) சிலிண்டர் விலை ₹15.50 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் இன்று (மே 1) முதல் ஒரு சிலிண்டர் ₹1,906-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எவ்வித மாற்றமுமின்றி ஒரு சிலிண்டர் ₹868.50-க்கு விற்பனையாகிறது