சென்னை பிப், 16
முகூர்த்த நாள் விசேஷ நாள் இல்லாததால், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை பாதியாக குறைந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3600க்கு விற்கப்பட்ட நிலையில் அது ரூ.1800 ஆக சரிந்துள்ளது. ஐஸ் மல்லி ரூ.3000லிருந்து 1800 ரூபாயாகவும், முல்லைப்பூ ரூ.2500 லிருந்து 1200 ஆகவும், ஜாதிமல்லி ரூ.2500 லிருந்து ரூ.1200 ஆகவும் கனகாம்பரம் ஆயிரம் ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.