சென்னை பிப், 25
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.160 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.8,055 க்கும், ஒரு சவரன் ரூ.64,440க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து ரூ.8,075-க்கும் ஒரு சவரன் ரூ.160 அதிகரித்து ரூ.64,600 க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை, ஒரு கிராம் வெள்ளி ரூ.108 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000கும் விற்கப்படுகிறது.