சென்னை பிப், 16
அங்கன்வாடிகளில் கழிவறை கட்ட தமிழக அரசு தற்போது ரூ.30,000 நிதி அளிக்கிறது. இந்த நிதி 2025-26 ம் ஆண்டு முதல் ரூ.75 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட இருப்பதாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதேபோல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் விடுத்த கோரிக்கையை ஏற்று தேங்காய் விவசாயிகளுக்கு முன்கூட்டியே நிதி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.