சென்னை பிப், 16
தை மாத சுப முகூர்த்தம் கோவில் திருவிழா உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வை கண்டிருந்த காய்கறிகள் இன்று சரிவை கண்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கும், பீன்ஸ் 25 ரூபாய்க்கும், கேரட் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 25 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ₹20 க்கும் இஞ்சி 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும், முருங்கை 70 ரூபாய்க்கும், பூண்டு 200 ரூபாய்க்கும் விற்பனையாவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.