சென்னை ஜன, 30
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட ஆறு முக்கிய பெரு நகரங்களில் முற்றிலும் தடை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது எப்படி செயல்படுத்தப்பட உள்ளது என்பது தொடர்பாக பிப்ரவரி 13ம் தேதிக்குள் பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்ய 6 நகரங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.