சென்னை ஜன, 30
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் முதல் தலைமை பொது மேலாளர் வரை 10 நிலையங்களில் உள்ள ஊழியர்கள் இதனால் பலனடைவார்கள். வீட்டு வாடகை படி மற்றும் நகர ஈட்டுப்படி ஆகியவற்றை உயர்த்தியும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு 2023 ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.