சென்னை ஜன, 30
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தமிழகத்தில் 1200 மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்த தீர்ப்பால் மாநில அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு முறைக்கு பாதிப்பு எனவும், தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். வசிப்பிட அடிப்படையிலான இட ஒதுக்கீடு கூடாது என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.