சென்னை ஜன, 2
28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்குச் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான அவசர சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் வரும் ஐந்தாம் தேதி நிறைவடைகிறது. அந்த 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், வார்டுகள் மறு வரையறை செய்யப்பட உள்ளன. தேர்தலை நடத்தத் திமுக அஞ்சுவதாக ஒரு புறம் விமர்சனங்கள் எழுந்துள்ளன.