புதுடெல்லி டிச, 17
அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக தெலுங்கானா காவல்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த நான்காம் தேதி புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அல்லு அர்ஜுன் திரையரங்கு உரிமையாளர் உள்ளிட்டோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 13ம் தேதி கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத்தில் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.