சென்னை அக், 18
சிவபாலன் முத்துக்குமார், கவின் கூட்டணியில் உருவாகியுள்ள பிளடி பெக்கர் படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளதாக பட குழு அறிவித்துள்ளது. தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, அக்ஷயா ஹரிஹரன் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் நெல்சன் தயாரிக்க ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.