ஜம்மு அக், 1
ஜம்மு காஷ்மீரில் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 90 தொகுதிகளை கொண்ட அங்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அதன்படி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18 வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் 61% வாக்குகள் பதிவானது. இரண்டாவது கட்டமாக 26 இடங்களுக்கு செப்டம்பர் 25 தேர்தல் நடந்த நிலையில் அதில் 56% வாக்குகள் பதிவாகின. இன்று 40 தொகுதிகளில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது.