கேரளா செப், 28
கேரளா மாநிலம் திருச்சூரில் மூன்று ஏடிஎம்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 67 லட்சம் பணத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் வெப்படை அருகே என்கவுண்டர் நடந்த இடத்தில் கேரள தமிழ்நாடு காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கைப்பற்றி எண்ணிப் பார்த்தபோது 67 லட்சம் இருந்தது தெரியவந்தது.