கேரளா செப், 24
குரங்கம்மையின் கடுமையான திரிபு வகையான 1-பி வைரஸ் இந்தியாவில் முதல்முறையாக கேரள மாநிலம் மலப்புரத்தில் 38 வயதான ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவில் குரங்கமையின் இரண்டாவது பாதிப்பு இதுவாகும். இந்நோய் பெரிய அளவில் பரவும் அபாயம் குறைவாக இருந்தாலும் எந்த சூழ்நிலையும் சமாளிக்க மாநிலங்கள் தயாராக உள்ளதாகவும் மக்கள் பீதி அடைய தேவை இல்லை என்று தெரிவித்தார்.