சென்னை செப், 24
செப்டம்பர் 14 நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடை குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2 Aபதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்வை 2,763 தேர்வு மையங்களில் 7.93 லட்சம் பேர் எழுதினர். இதனிடையே தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு https://TNPSC.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துக்களை 7 நாட்களுக்குள் இணைய வழியில் தெரிவிக்கலாம்.