சென்னை செப், 23
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. வட தமிழகம் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இரண்டு நாளைக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் RMC குறிப்பிட்டுள்ளது.