சென்னை செப், 23
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் இந்திய அரசு இனியும் பொறுமை காக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை கண்டித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அன்புமணி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களில் இலங்கை அரசு பறித்துக் கொண்டிருப்பதாகவும் இது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.