சென்னை செப், 20
தமிழகத்தில் பிராய்லர் கோழிகளைப் போல பிராய்லர் ஆடுகள் விற்பனைக்கு வர உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இது குறித்து TN FACTCHECK ஆடுகளில் பிராய்லர் என்ற வகையை கிடையாது என விளக்கம் அளித்துள்ளது. போயர் வகை ஆடுகள் சவுத் ஆப்பிரிக்காவை சேர்ந்தவை என்றும் ஆறு மாதங்களில் 24 கிலோ எடை வரை வளரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கலப்பின விருத்தி அடிப்படையில் தமிழகத்தில் இவ்வகை ஆடுகள் இனப்பெருக்கம் செய்யப்படுவதாக கூறியுள்ளது.