சென்னை செப், 19
வீடு, கடை வாடகை உள்ளிட்ட சாதாரண ஒப்பந்த ஆவணங்களுக்கு ரூபாய் 200 மதிப்புள்ள முத்திரைத்தாள்களை பயன்படுத்த பதிவு துறை அறிவுறுத்தியுள்ளது. வீட்டு வாடகைக்கு பலரும் 20 ரூபாய் பத்திரங்களையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் குறைந்த மதிப்பிலான பத்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஒப்பந்தங்களை பதிவு செய்யாமல் வைத்துக் கொள்வதாக இருந்தாலும் 200 ரூபாய் முத்திரைத்தாளையே பயன்படுத்துமாறு கூறியுள்ளது.