ஆப்கானிஸ்தான் செப், 17
போலியோ பரவலால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான ஆப்கானிஸ்தானில், சொட்டு மருந்து முகாம்களை தலிபான் அரசு நிறுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான முகாம்கள் இன்னும் தொடங்காத நிலையில் இது நிறுத்தப்பட்டதற்கான காரணத்தையும் அந்நாட்டு அரசு வெளியிடவில்லை. இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் 18 போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இது கடந்த ஆண்டு 6 ஆக இருந்தது.