சென்னை செப், 10
ஆரம்ப பொது வழங்கல்(IPO) என்பது மூலதனத்தை திரட்டுவதற்கான நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பொதுமக்களுக்கு விற்கும் செயல்முறையை குறிக்கிறது. கொடுக்கப்பட்ட கால அளவில் முதலீட்டாளர்கள் IPOக்கு விண்ணப்பம் செய்யலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்வதை சப்ஸ்கிரைப் என்கிறோம். IPOநிறைவடைந்ததும் சப்ஸ்க்ரைப் செய்பவர்களுக்கு பங்குகள் வழங்கப்படும். பிறகு பங்குச் சந்தையில் மற்ற பங்குகளை போல அவை வர்த்தகமாக தொடங்கும்.