சென்னை செப், 3
இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.