சென்னை ஆக, 27
தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்க சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வு சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும், இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் என்றும் கூறியுள்ளார். எளிய மக்களை கசக்கி பொழியும் இந்த கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.