சென்னை ஆக, 26
தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்கிறார். நாளை இரவு சென்னையில் இருந்து புறப்படும் அவர் அங்கு 17 நாட்கள் தங்குகிறார். ஆகஸ்ட் 28 ல் சான் பிரான்சிஸ்கோ வில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் அவர், ஆகஸ்ட் 31-ல் புலம்பெயர் தமிழர்களுடன் உரையாடுகிறார். செப்டம்பர் 2- முதல் 12 வரை சிக்கோகோவில் பல்வேறு முதலீட்டாளர்களை சந்திக்கும் அவர் செப்டம்பர் 12 ல் அங்கிருந்து தமிழகம் திரும்புகிறார்.