காஞ்சிபுரம் ஆக, 30
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி 10 பயனாளிகளுக்கு தேய்ப்பு பெட்டிகளை வழங்கினார். பெட்டிகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் தங்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி புரிந்த மாவட்ட ஆட்சியருக்கு மிகுந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.