தர்மபுரி ஆக, 30
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று வரைவு வாக்குச்சாவடி பட்டியல் 2022 வெளியீட்டு எதிர்வரும் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2023 தொடர்பாக தர்மபுரி மாவட்டத்தில் புதிய பாகங்கள் அமைத்தல், வாக்குச்சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச்சாவடியை வேறு கட்டடத்திற்கு மாறுதல் செய்தல் மற்றும் வாக்குச்சாவடி பெயர் திருத்தம் செய்தல் போன்ற மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை நிகழ்த்தினார். உடன் தர்மபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், அரூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனி தேவி மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.