சென்னை ஆக, 24
2026 சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் தாவெக தனித்துப் போட்டியிட்டு 10 சதவீதம் வாக்குகளை பெற்றாலே விஜய் கிங்மேக்கர் ஆக முடியும். திமுக, அதிமுக தவிர வேறு கட்சிகள் கூட்டணி இல்லாமல் இந்த அளவு வாக்குகளை பெற்றதில்லை. 2006 தேர்தலில் மைனாரிட்டி திமுக அரசு அமைய தேமுதிக பிரித்த 8.5% வாக்குகளே காரணம். அதனால் தான் அடுத்தடுத்த தேர்தல்களில் அவரை கூட்டணியில் சேர்க்க இரு கட்சிகளும் முயன்றன. 10% வாக்குகள் என்பது தமிழக அரசியல் போக்கை மாற்றும் என தொண்டர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.